திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

 
M.K.Stalin

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்தன. தமிழகத்தில் திமுக,  கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன்  பேச்சுவார்த்தை நடந்துள்ளது.  

stalin

மற்றொரு புறம்  அதிமுக கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  பாஜக  கூட்டணியில் தமாக இணைந்துள்ள நிலையில்  இணைக்க பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன்  பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. 

arivalayam

இந்நிலையில் திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்பறுள்ளனர். ஏற்கனவே 4 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிந்துள்ளது. காங்கிரஸ், விசிக, மதிமுக உடன் தொகுதிப் பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.