திமுக கூட்டணி 40/40 வெற்றி! - வாக்கு சதவீத நிலவரம்!!

 
dd

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டை திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றிவாகை சூடி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் முடிவுகளில் திமுக கூட்டணி 46.97 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது .

dmk

திமுக 22 இடங்களில் போட்டியிட்ட நிலையில் 26.93 சதவீதம் வாக்குகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 10.67 சதவீதமும் , சிபிஎம் இரண்டு தொகுதிகளில் 2.52 சதவீதமும் , சிபிஐ இரண்டு தொகுதிகளில் 2.15 சதவீதமும் , விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் 2.25 சதவீதமும்,  மதிமுக ஒரு தொகுதியில் 1.25 சதவீதமும்,  முஸ்லிம்லீக் ஒரு தொகுதியில் 1.17 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன.

dmk

அதிமுக கூட்டணியை பொறுத்தவரை அதிமுக 20 . 46 சதவீதமும்,  தேமுதிக 2.5 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளது. மொத்தமாக அதிமுக மக்களவைத் தேர்தலில் 23.5% வாக்குகளை கைப்பற்றியுள்ளது.

t

பாஜக கூட்டணி 18.28 சதவீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது. இதில் பாஜக 11.24 சதவீதமும் , பாட்டாளி மக்கள் கட்சி 4.2சதவீதமும்,  தமிழ் மாநில காங்கிரஸ் 0. 94 சதவீதமும் , அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 0.90 சதவீதமும் வாக்குகள் பெற்றுள்ளன.  நாம் தமிழர் கட்சி மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நிலையில் 8.10 சதவீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது. மற்றவை 2.66% வாக்குகளை பெற்றுள்ள நிலையில்,  நோட்டாவில்  1.07 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள.