உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக வேட்பாளர்கள் தயக்கம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதா? வேண்டவே வேண்டாம் என அதிமுக, திமுக நிர்வாகிகள் அலறியடித்து ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவது சுலபம் அல்ல.. எதற்கு தேவையில்லாத வீண் செலவு.. மேயர் பதவிக்கு கூட ஆள் கிடைக்காமல் திராவிட கட்சிகள் திண்டாடுகின்றன. இப்படியே போனால் தவெக உள்ளாட்சி தேர்தலில் வேற லெவலில் வெற்றி பெறும் போல.. தற்போது ஏழு தொகுதி இடைத்தேர்தலில் கூட திமுகவுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அதிமுக தலைமை தனது தொண்டர்கள் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும். எனவே அதிமுக முற்றிலுமாக புறக்கணிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் திமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் அவர்களுக்கான செலவு யார் செய்வது என்பது தொடர்பாக கேள்வி எழுந்துள்ளதால் வேட்பாளர்கள் போட்டியிட தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும் கட்சி தலைமை சார்பில் அவர்களுக்கு செலவுக்கான பணத்தை தர அமைதித்தால் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம் என்றாலும் எதிர்க்கட்சி என்கிற முறையில் திமுக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

