குதிரை பேரம் நடத்தும் தவெக- ஆளுநரிடம் திமுக, அதிமுக, பாஜக கூட்டாக புகார்
தவெக குதிரை பேரம் நடத்தி வருவதாக குற்றம்சாட்டி ஆளுநர் அர்லேகரிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவி விலகியது குதிரை பேரம் எனவும், இடைத்தேர்தலில் பதவி விலகியவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடக்கூடாது எனவும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக எம்பி இன்பதுரை ஆகியோர் மனு அளித்தனர். நேற்று காலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநரை சந்தித்து மனு அளித்த நிலையில், திமுக நிர்வாகிகளும் மனு அளித்தனர். தொடர்ந்து அதிமுக தலைவர்களும் ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர்.
காவல்துறை இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைச் சட்டவிரோதமாகக் கைது செய்தல், காவலில் வைத்து வற்புறுத்துதல் மற்றும் கட்சி மாறத் தூண்டுதல் போன்ற செயல்கள் குறித்துக் கடுமையான கவலைகளைத் தெரிவிக்கும் மனு ஒன்றை, திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி இன்று ஆளுநரிடம் அளித்தார் என்பது குறிப்பிடதக்கது.

