அதிமுகவுடன் இணையும் தேமுதிக?- 14 இடங்கள் கேட்பதாக தகவல்
அதிமுகவுடன் கூட்டணியில் சேருவதற்கு தேமுதிக 14 இடங்கள் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
![]()
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெறாத நிலையில், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிப்பதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈபிஎஸ் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக கூட்டணியில் வருவதற்கு தேமுதிக 14 இடங்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது. மரியாதை கிடைக்கும் இடத்திலேயே கூட்டணி அமைக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறிவந்த நிலையில், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓரிரு நாளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து தொகுதி உடன்படிக்கை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக தேமுதிக திமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டதாக தகவல் வெளியானது. திமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் தேமுதிக 20 சட்டமன்ற தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் 4-லிருந்து 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும் என திமுக உறுதியாக கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


