டெல்டா விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும்- விஜயகாந்த்

 
vijayakanth

 டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும், பயிர்காப்பீட்டு தொகையை அரசே ஏற்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  - விஜயகாந்த்..

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்டா மாவட்டங்களில்‌ கடும்‌ வறட்சியால்‌ விவசாயிகள்‌ பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்‌, விவசாயிகள்‌ அனைவரும்‌ பயிர்காப்பீடு செய்ய 30ம்‌ தேதி வரை அவகாசம்‌ வழங்கவேண்டும்‌. ஆனால்‌ தீபாவளி பண்டிகை காலம்‌ என்பதாலும்‌, கடந்த சில நாட்களாக தொடர்‌ மழை பெய்து வருவதாலும்‌, கிராம நிர்வாக அலுவலரிடம்‌ சிட்டா அடங்கள்‌ பெற, விவசாயிகள்‌ அவதிபட்டு வருகிறார்கள்‌. ஆகவே பயிர்காப்பீட்டிற்கான கால அவகாசத்தை, விவசாயிகள்‌ நலன்‌ கருதி வரும்‌ 30ம்‌ தேதி வரை நீட்டித்து தர வேண்டும்‌. மேலும்‌ டெல்டா பகுதிகளில்‌ விவசாயத்திற்கு போதிய நீர்வரத்து இல்லாமல்‌ வரட்சி நிலவியதால்‌, மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள்‌ கடும்‌ சிரமத்தில்‌ இருப்பதால்‌, கடந்த காலங்களில்‌, டெல்டா மாவட்டத்தில்‌ உள்ள விவசாயிகளின்‌ நலன்கருதி, காப்பீட்டுத்‌ தொகை முழுவதும்‌ தமிழக அரசே செலுத்தியது. 

அதேபோல்‌ இந்த முறையும்‌, தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்‌ என கேட்டுக்கொள்கின்றேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.