தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

 
விஜயகாந்த்

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி | Tamil News Vijayakanth  admitted hospital in chennai


தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று இரவே வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக  வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துவருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு  வருகிறார்.  இதன்காரணமாக நீண்ட நாட்களாகவே  பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துவிட்டார். தேமுதிக பொருளாளர் பிரேமலதாவே  அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார். பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களுக்கும் அவர் தலைமையிலேயே நடத்தப்படும். கட்சித் தொண்டர்களின் நிகழ்ச்சிகளில் கேப்டனின் மகள் விஜயபிரபாகரன் கலந்துகொண்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.