தேமுதிக சார்பில் நாளை முதல் விருப்ப மனு விநியோகம்
Feb 5, 2026, 15:45 IST1770286521000
தேமுதிக சார்பில் நாளை முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவிருப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை இறுதி செய்யாத நிலையில் தேமுதிக சார்பில் நாளை முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படவிருப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். 234 தொகுதிகளுக்கும் நாளை முதல் வரும் 12ம் தேதி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தொகுதிக்கு ரூ.15,000 மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.10,000 ஆக விருப்ப மனு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


