தேமுதிக ராஜ்யசபா வேட்பாளரை நாளை பிரேமலதா அறிவிப்பார்- சுதீஷ்
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தலைமை நிலைச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து பேசினர் . இந்த பேச்சு வார்த்தையின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் திருச்சி சிவா, டி ஆர் பாலு, ஆர் எஸ் பாரதி, அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது எனவும்; இதனை தொடர்ந்து, நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த குழுவினரும் கழகத்தின் குழுவினரும் கலந்துபேசி போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்திட தீர்மானிக்கப்படுகிறது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. திமுகவின் கூட்டணியில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது . தமிழக முதல்வருக்கும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
திமுக தேமுதிகவிற்கு சீட்டு ஒதுக்கி உள்ளது இதற்குப் பிறகு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளர் நாளை அறிவிப்பார் அதன் பிறகு வேட்பு மனு தாக்கல் நடைபெறும். ராஜ்யசபா மட்டுமல்லாமல் எல்லாம் பேசப்பட்டது. முதலில் ராஜ்யசபா கொடுத்துள்ளார்கள். இன்னும் ஒரு வாரத்திற்குள் எத்தனை சட்டமன்ற தொகுதி, எந்தெந்த தொகுதி ஒரு வாரத்தில் அடுத்த கட்டமாக பேசப்படும். அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் கண்டிப்பாக எத்தனை தொகுதி என்பது குறித்து எல்லாம் தெரிவிப்போம் என தேமுதிக பொருளாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்

