தேமுதிக வருகையால் திமுக கூட்டணியில் சலசலப்பா?- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

 
பிரேமலதா

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார்.

பிரேமலதா

உலகளந்த பெருமாள் கோவில் சாமி தரிசனம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமாதா விஜயகாந்த், “இன்று தேர்தல் தேதி அறிவிக்க உள்ளனர். திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று 200 தொகுதிக்கு மேல் வெல்லும். திமுக கூட்டணியில் தேமுதிக வருகையால் கூட்டணி கட்சியினர் இடையே எந்த அதிருப்தியும் இல்லை, அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலில் போட்டியிட உள்ளோம். இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி தொகுதி முடிவு செய்யப்பட்டு தேமுதிக குழு யாரை போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனை செய்யும். கடந்த முறை விட இந்த முறை அதிக தொகுதியில் போட்டியிடுவோம். 

தேமுதிகவில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் விரும்புகிறார்கள், எண்ணிக்கை மட்டும் தொகுதி முடிவு செய்த பிறகு  எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பது முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்.