“அதிமுக ICU-க்கு போனால் கூட பரவாயில்லை, மார்ச்சுவரிக்கு சென்று கொண்டிருக்கிறது”- தேமுதிக விமர்சனம்

 
ச்

அதிமுக ICU-க்கு போனால் பரவாயில்லை, மார்ச்சுவரிக்கு சென்று கொண்டிருக்கிறது, இனிமேல் அதிமுக தேறுவது ரொம்ப சந்தேகம் என தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி விமர்சனம் செய்தார். 

கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய தேமுதிக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, “அதிமுக ICU-க்கு போனால் கூட பரவாயில்லை, மார்ச்சுவரிக்கு சென்று கொண்டிருக்கிறது. உடல் கூறாய்வுதான் செய்ய வேண்டும். இனிமேல் அதிமுக தேறுவது ரொம்ப சந்தேகம். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என கேப்டன் சொல்லுவார்... அதுவே இன்று உங்களுக்கு நடந்துவிட்டது. 2011-இல் எங்களுடைய MLA-க்களை எப்படி எல்லாம் விலைக்கு வாங்கினீர்கள்? என்னிடத்தில் எல்லாம் எத்தனையோ கோடி தருகிறேன் என சொன்னீங்க... நான் உண்மையான தொண்டன். என்ன நடந்தாலும், எங்கள் அண்ணன் இருக்கும்வரை கேப்டனுடன் தான் இருப்பேன் எனக் கூறினேன். அண்ணன் இன்று இல்லையென்றாலும் அண்ணியார் கூட இருந்துகொண்டிருக்கிறேன்.


எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்கிறார்கள். முன்னாள் மந்திரியும் கட்சியை விட்டு செல்கிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏவும் செல்கிறார்கள். ஆசைப்படுகிறவர்கள் போகிறார்கள் போகட்டும். ஆனால் விஜயை பார்த்தால் ஒன்று கேட்க வேண்டும். திமுகவை தீய சக்தி என மேடையில் சொன்னீங்க... அதிமுகவை ஊழல் கட்சி என சொன்னீங்க... ஊழல் கட்சியிலிரு்ந்து வந்தவர்களை எல்லாம் மொத்தமா உங்க கட்சியில் சேர்த்து கொள்கிறீர்களே..? இப்போது அதிமுக ஊழல் கட்சி இல்லையா? அப்ப நீங்களும் ஊழல் செய்ய போறதாதான அர்த்தம், இதுதான அறிகுறி. இதுதான் உண்மை. தவெகவில் இருப்பவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. செங்கோட்டையன் மற்றும் ஜேசிடி பிரபாகர் மட்டுமே அங்கு விவரம் ட்தெரிந்தவர்கள்” என்றார்.