“ஈபிஎஸ் செய்த துரோகமே திமுகவுடன் இணைய காரணம்”- தேமுதிக விளக்கம்

 
s

எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தால் என்டிஏ கூட்டணியை விட்டு வெளியேறினோம் 20 வருடங்களாக எங்களை வைத்து வாக்கு அறுவடை செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என தேமுதிக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் மகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.


திமுக தேமுதிக கூட்டணி இன்று அறிவித்தது எதிரொலியாக தேமுதிக தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி வரக்கூடிய நிலையில் கொடைக்கானலில் உள்ள தேமுதிகவினர் இந்த கூட்டணியை பெரிதும் வரவேற்புடன் இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கினர். இதுதொடர்பாக தேமுதிக தகவல் தொழில்நுட்பத்துறை துணைச் செயலாளர் மகேந்திரன் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளாக எங்களுடைய வாக்குகளை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு சிறந்த பாடங்களை புகட்டுவோம். மேலும் எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தால் இந்த கூட்டணி உருவாகியுள்ளது என தெரிவித்துள்ள அவர் தேமுதிகவினர் தற்போது மகிழ்ச்சியில் உள்ளதாக பேசினார்.