தேமுதிகவிற்கு முரசு, நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

 
ச்

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

DMDK Party - DMDK Party added a new photo.


தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியில் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளாக உள்ளது. இதன்படி தேமுதிகவிற்கு முரசு சின்னமும் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் இந்த இரண்டு கட்சிகளும் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இல்லை. எனவே புதுச்சேரியில் தங்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு இரண்டு கட்சிகளும் விண்ணப்பித்து இருந்தன.

இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு விதியின் பிரிவு 10ன் படி புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவிற்கு முரசு சின்னத்தையும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளது