தலைவர் விஜயகாந்த் எதை விரும்பினாரோ அது இன்று நடந்தது - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி..!

 
1

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "கடந்த 10 ஆண்டுகளாக மறைந்த தலைவர் விஜயகாந்த் அவர்கள் எதை விரும்பினாரோ, அது இன்று நிறைவேறியுள்ளது. திமுக-வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறோம்," என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

எந்த தொகுதிகள், யார் வேட்பாளர்கள் என்பது எல்லாம் இதுக்கு பிறகு குழு அமைத்து முடிவு செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். திமுகவுடன் முதல்முறையாக தேமுதிக கூட்டணி அமைத்து இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களும், கட்சியினரும் மிக சந்தோஷமாக இந்த கூட்டணியை வரவேற்று இருக்கிறார்கள். இக்கூட்டணி 200க்கும் மேல் தொகுதிகளில் அமோக வெற்றி பெறும். இன்று கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. உங்களது சந்தேகம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன். இவ்வாறு பிரேமலதா கூறினார்.