"Social media- ல என்னை அடிங்க; வைகோவ விட்டுடுங்க"- துரை வைகோ

 
s

ஒரு கலெக்டருக்கு இப்படி நடந்துருக்கவே கூடாது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பி  துரை வைகோ கூறியுள்ளார். 

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒரு துணிச்சலான முடிவை முதலமைச்சர் எடுத்திருக்கிறார். மதச்சார்பின்மையைக் காக்கும் வகையில் முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் திமுக கடுமையான மன உளைச்சலில் இருக்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக MLA மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நான் கூறியிருந்தேன். ஆனால் Social media-வில் என்னைப் பற்றி தவறான தகவலை தில்லுமுல்லு கழகத்தினர் பரப்பி வருகிறார்கள்.  

கேள்விகள் கேட்டு வைகோ பேசுவதை கொச்சைப்படுத்தி பரப்புகிறார்கள். ஒரு 84 வயதானவரை உணர்ச்சிவசப்படுத்தி, அதை கட் செய்வதில் அவர்களுக்கு ஒரு சுகம். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். Social media-வில் என்னை அடியுங்கள்.  நான் பதில் கொடுக்கிறேன். 84 வயது வரை தமிழ்நாட்டுக்காக உழைத்த மனிதரை இப்படி Social media-வில் போடுவதை கேவலம் என்பேன். கருத்து ரீதியாக வாதாடுங்கள். ஆனால் இது போன்ற தவறான நரேட்டிவ் செய்கிறார்கள். திமுகவின் அரசியல் எதிரிகளை ஒழிக்க அவர்களுக்கு இது ஒரு வழி. இது உங்களுக்கு கேவலமா இல்லையா சொல்லுங்க..கருத்தியல் ரீதியாக வாதாடுங்க.." என்றார்.