இலங்கைக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி!!

 
stalin vijayakanth

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

vijayakanth

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.  அத்துடன் இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிட முதல்வர் கோரிக்கை விடுத்த நிலையில், நன்கொடை வழங்க விரும்புவோர் அரசின் அதிகாரப்பூர்வ வங்கி கணக்கு எண் அல்லது மின்னனு பரிவர்த்தனை மூலம் வழங்கலாம் என குறிப்பிட்டு அதன் விவரங்களையும் வெளியிட்டார். 



இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக  திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.