சத்தமில்லாமல் வேலை பார்த்த விஜய்! கர்நாடக முதல்வரை தமிழகம் வர வைத்து அசத்தல்

 
s

தமிழக முதல்வர் விஜய்யை, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வரும் வியாழன் அன்று (ஆகஸ்ட் 20) மாலை சென்னையில் சந்திக்கிறார்.

காவிரி நீர் விவகாரம் தமிழ்நாடு-கர்நாடகா அரசியலில் முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில் கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமார், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை வியாழன் அன்று மாலை சென்னையில் சந்திக்கிறார். காவிரி நீர் பிரச்சனை குறித்துப் பேச இருந்த முந்தைய பயணம் பாதுகாப்பு காரணங்களால் ரத்தான நிலையில், வருகின்ற 19 மற்று 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டின் இடையே இந்த முக்கிய சந்திப்பு நடைபெறுகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், “கர்நாடக விவசாயிகள் நலனை பாதுகாப்பது தமது கடமை. சட்டத்துக்கு மதிப்பளித்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது” என்றார்.