1971ம் ஆண்டு மக்கள் தொகையே தொகுதி மறுசீரமைப்புக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் - டி.கே.சிவகுமார்

 
sivakumar

கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில், பாஜகவினர் ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்றது. தொகுதி மறுச்சீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியதாவது: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்ட ஒன்றிணைந்துள்ளோம். 1971ம் ஆண்டு மக்கள் தொகையே தொகுதி மறுசீரமைப்புக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்; இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்வதற்கான முன்னெடுப்புதான் இந்த கூட்டம். 

கூட்டாட்சி ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்டடத்தில், ஒவ்வொரு செங்கலாக உருவி கூட்டாட்சியை சிதைக்கின்றனர். ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் இங்கே ஒன்றுகூடியுள்ளோம். நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக, இந்த கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் அமைகிறது. தனது காலில் ஏற்பட்ட காயத்தால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறினார்.