தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு - சொந்த ஊர்களுக்கு செல்வோர் கவனத்திற்கு!!

 
train

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து புறப்படும் விரைவு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது.  தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதனால் அரசு சார்பில் ரயில் மற்றும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்.  அந்த வகையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக டிக்கெட் ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களில் முன்பதிவானது சில நிமிடங்களிலேயே முடிந்து காத்திருப்பர் பட்டியலுக்கு வந்தது.  தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு பொருத்தவரை 120 நாட்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும்.

 அந்த வகையில் பண்டிகைக்கு இரண்டு நாள் முன்பாக அக்டோபர் 29ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து விரைவு ரயில் புறப்படுவதற்கு வசதியாக டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது.  இணையதளம் வழியாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது சென்னையிலிருந்து மதுரை,  திருநெல்வேலி , தென்காசி ஆகியோர்களுக்கு புறப்படும் பாண்டியன்,  நெல்லை பொதிகை விரைவு ரயில்களின் இரண்டாம் வகுப்பு வசதி பெட்டிகளில்,  2 நிமிடங்களிலே டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.  இதைப்போல் சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்படும் முத்துநகர்,  நாகர்கோவிலுக்கு புறப்படும் கன்னியாகுமரி விரைவு ரயில்,  நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவற்றின் முன்பதிவு முடிந்தது.

train

முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28ஆம் தேதி செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு நேற்று நடந்த முடிந்தது.  அக்டோபர் 29ஆம் தேதி செல்லும் ரயில்களுக்கு இன்றும்,  அக்டோபர் 30ஆம் தேதி செல்லும் ரயில்களுக்கு நாளையும்,  அக்டோபர் 31ஆம் தேதி செல்லும் ரயில்களுக்கு வருகிற புதன்கிழமையும் முன்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.