அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.490 தீபாவளி பரிசு

 
puducherry

புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.490 தீபாவளி பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்- மத்திய அரசு அறிவிப்பு | Tamil News Diwali  Bonus for Railway Employees

வருகிற 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதுமாக கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 7மணி வரையிலும், இரவு 7மணி முதல் 8மணி வரையிலும் என 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சீன வகை பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என பல்வேறு வழிகாட்டுதல்களை அறிவுறுத்தி உள்ளது. தீபாவளி நோன்பு திங்கள் அன்று கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் தீபாவளி இலவச தொகுப்பிற்கு பதிலாக ரொக்கமாக ரூ.490 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.490 தீபாவளி பரிசாக வழங்கப்படவுள்ளது. 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்ச்சகரைக்கு இணையாக ரூ.490 வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 37 ஆயிரத்து 406 குடும்ப அட்டைகளுக்கு ரூ.16.53 கோடி வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது.