தீபாவளி பண்டிகை - தீவுத்திடலில் பட்டாசு விற்பனை

 
crackers

தீபாவளி பண்டிகையையொட்டி தீவுத்திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

crackersதீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.    தீபாவளி பண்டிகையின் போது சென்னை தீவுத்திடலில் மாபெரும் பட்டாசு விற்பனை ஆண்டுதோறும் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை குறித்து அறிவிப்பை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. 

crackers

அதன்படி  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு 55 கடைகள் மூலம் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. அத்துடன் பட்டாசு கடைகளை அமைக்க உரிமையாளர்களுக்கு சில விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதில், விபத்தை தவிர்க்க ஒவ்வொரு கடைகளுக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், பட்டாசு விற்பனையில் ஈடுபடுவோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இந்த தொழிலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், பட்டாசு உற்பத்தியாளர் சங்கமும் கடைகளை அமைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.