தீபாவளி பண்டிகை : சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்!!

நாகர்கோவில் தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகையானது தமிழ்நாட்டில் வருகிற 12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மக்கள் தீபாவளி பண்டிகையொட்டி சிரமமின்றி வெளியூர்களுக்கு செல்லவும், சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பி வரவும் சிறப்பு ரயில்களும் ,சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்த சூழலில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஊரிலிருந்து திரும்புவோர்களுக்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாகர்கோவில் தாம்பரம் இடையேயும், தாம்பரம் நாகர்கோவில் இடையேயும் தலா நான்கு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, ”நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு நவம்பர் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய 4 நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் ரயில், நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. என்று குறிப்பிட்டுள்ளது.