தீபாவளி முன்பதிவு - சில நிமிடங்களிலேயே காலியான டிக்கெட்டுகள்

 
train

தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு பொருத்தவரை 120 நாட்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக டிக்கெட் ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களில் முன்பதிவானது சில நிமிடங்களிலேயே முடிந்து காத்திருப்பர் பட்டியலுக்கு வந்தது.  

train

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் காலியாகின; தீபாவளி அக்டோபர் 31இல் கொண்டாடப்படும் நிலையில் 30ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.  திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி செல்லக்கூடிய ரயில்களில் டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் முடிந்தது.

அக்டோபர் 31ஆம் தேதி செல்லும் ரயில்களுக்கு நாளை  முன்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.