போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வெளியீடு..!

 
11 11

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் படி, போக்குவரத்து பணியாளர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில்,
 

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் 1,05,955 பணியாளர்களுக்கு, வழங்கப்படும் போனஸ், கருணைத் தொகை ரூ.175 கோடியே 51 லட்சம் இன்று(அக்டோபர் 15) அவர்களின் வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.
 

இவ்வாறு சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.