டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஒவ்வொரு பொதுத்துறை .நிறுவனமும் தனித்தனியாக தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி போனஸ் மூலம் 25,824 டாஸ்மாக் பணியாளர்கள் பயனடைய உள்ளனர். டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் ஆகியோருக்கு அதிகபட்சமாக 16,800 வரை தீபாவளி போனஸ் கிடைக்கப்பெறும்