யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்ப்பு

 
தீபாவளி பண்டிகை தீபாவளி பண்டிகை

யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் | Diwali festival  celebrated with pomp and show across the country

கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்திற்கான ஐ.நா அமைப்பு யுனெஸ்கோ உலகம் முழுவதிலுமுள்ள சிறந்த பாரம்பரியச் சின்னங்களை ஆய்வு செய்து, அவற்றிற்கெல்லாம் பாரம்பரியச் சின்னத்திற்கான  அந்தஸ்தை அளித்து வருகிறது. யுனெஸ்கோ தரும் கலாச்சாரப் பாரம்பரிய அந்தஸ்த்தென்பது கௌரவமானதாகக் கருதப்படுகிறது. 

 இந்தியாவின் தீபாவளிப் பண்டிகையை மனித குலத்தின் கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. யுனெஸ்கோவின் இந்தப் புதிய அறிவிப்புக்கு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்ஷெகாவத் உள்பட மற்றும் பலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களும் மற்றும் விற்பனையாளர்களும் நன்றி தெர்ரிவித்துள்ளனர். யுனெஸ்கோ கலாச்சாரப் பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி ப் பண்டிகையைச் சேர்த்து வெளியிட்டுள்ள தென்பது தங்களுக்கு மிகவும் சந்தோஷமான, மகிழ்ச்சி யளிக்கக்கூடிய  தருணமாயிருந்து, இந்தியர்கள் அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரு நிகழ்வாகவும் அமைந்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின் மூலமாக உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து நாட்டு மக்களும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? ஏன் கொண்டாடுகிறோம். எப்படிக் கொண்டாட வேண்டுமென்பது போன்ற முழு விபரங்களையும் அறிந்து கொள்ள வழிவகை செய்வதுடன், வருங்கால தலைமுறையினருக்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டப் பதிவை எடுத்துச் செல்லலாம். தீபாவளி என்றாலே வீடுகளில் தீபமேற்றி, பட்டாசுகளை வெடித்து, அனைவரும் ஒற்றுமையோடு இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டாடும் திருவிழாவென்று அடுத்து வரும் தலை முறையினரின்  மனதில் பதியச் செய்யலா மென்பதால், சிவகாசி வாழ் மக்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது என பட்டாசு தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.