நடிகை திவ்யா ஸ்பந்தனா உடல்நிலை குறித்து பரவும் தகவல் வதந்தி

 
tnt

நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா நலமாக உள்ளார். நாளை பெங்களூரு திரும்புவார் என அவரது தோழி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

tn

தமிழில் குத்து, பொல்லாதவன்,கிரி ,வாரணமாயிரம், சிங்கம்புலி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா.  திவ்யா ஸ்பந்தனா என்ற இயற்பெயரை கொண்ட இவர் நடிப்பிலிருந்து விலகி பின்னர் அரசியலில் களமிறங்கினார்.  காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த இவர் , கடந்த 2013 ஆம் ஆண்டு மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

tn

இந்த சூழலில் நடிகை ரம்யா மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து ஜெனிவாவில் இருக்கும் நடிகை ரம்யாவிடம் இது குறித்து விளக்கம் கேட்டபோது தான் ஜெனிவாவில் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  தனக்கு தற்போது தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  முன்னதாக ரம்யாவின் தோழியும் பத்திரிக்கையாளருமான சித்ரா சுப்ரமணியம் அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் பெங்களூர் திரும்புவார் என்றும்  தெரிவித்துள்ளார்.