“பாட்டு பாடுபவர் தலைவர் அல்ல; பாடுபடுபவர் தான் தலைவர்” - திவ்யா சத்யராஜ்
ஒரு நடிகனாக யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அதற்காக அவருடைய 'Sweet, Cute' பார்த்து நான் வாக்களிக்க மாட்டேன். அவருடைய மக்கள் பணியைப் பார்த்துதான் நான் வாக்களிப்பேன் என சத்யராஜ் மகள் திவ்யா தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் உரையாற்றிய சத்யராஜ் மகள் திவ்யா, “மேடையில நின்று பாட்டுப்பாடுகிறவர் தலைவர் இல்லை, மக்களுக்காக பாடுபடுகிறவர்தான் தலைவர். திரையில் டான்ஸ் ஆடுறவர் தலைவர் கிடையாது. தரையில நின்னு இறங்கி அடிப்பவரே தலைவர். படையப்பாவுல வர்ற ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஆபீஸ்ல உக்காந்துட்டு லாஜிக்கே இல்லாம ஸ்லோமோஷன்ல பேசுறவரு தலைவர் கிடையாது. துபாய் பயணத்த கேன்சல் பண்ணிட்டு மக்களுக்காக ஓடி வந்தாருல அவர் தான் உண்மையான தலைவர். புதிய கட்சியில இருக்குறவங்களே கொஞ்சம் லாஜிக்கோட பேசுங்க. நான் நடிகர் யோகி பாபுவின் பெரிய ரசிகை. ஒருவேளை நாளை அவர் கட்சி ஆரம்பித்தால் அவர் Sweet ஆ இருக்காரு, Cute-ஆ இருக்காரு என்பதற்காக அவருக்கு வாக்களிக்க மாட்டேன். அவருடைய மக்கள் பணியை பார்த்துதான் வாக்களிப்பேன். ஒரு ரசிகனாக இருப்பதற்கும், நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
நீ அரசியலுக்கு வந்தால் சேகர்பாபுவை போல இருக்க வேண்டும் என் அப்பா கூறினார். அதற்கு நான், எப்போதும் ஒரே ஒரு சூரியன்தான், அதேபோல ஒரே ஒரு சேகர்பாபுதான் இருக்க முடியும். அவரை போல செயல்பட யாராலும் முடியாது என்றேன். உதயநிதி மேடையில் ஏறி பாட்டு பாடும் தலைவர் இல்லை. மக்களுக்காக பாடுபடும் தலைவர்” என்றார்.


