“இரட்டை அர்த்தத்தில் பேசவே இல்லையே.. உதய் அண்ணா பேசியது 200% தவறில்லை”- திவ்யா சத்யராஜ்
I Stand With உதய் அண்ணா என திமுக ஐடி விங் துணை செயலாளர் திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா சத்யராஜ், “உதய் அண்ணா பேசியது 200% தவறில்லை. எந்த தப்பும் செய்யாத ஒருவரை கைது செய்வது அநியாயம், அராஜகம். மேடை நாகரிகத்தோடு தான் உதய் அண்ணா பேசி இருக்கிறார். ரு பொண்ணா அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என்பதில் ரொம்ப Strong-ஆ நிக்குறேன்.. இரட்டை அர்த்தத்தில் பேசவே இல்லையே” என்றார்.
முன்னதாக திவ்யா சத்யராஜ் தனது எக்ஸ் தளத்தில், “மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைதுசெய்துள்ள தற்குறி தவெக அரசுக்கு வன்மையான கண்டனங்கள். தஞ்சாவூரில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்தக் கைது நடந்திருக்கிறது. சட்டப்படி சந்தித்து வெல்வோம். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வெளியே வீர வசனம் பேசிவிட்டு 'அவரை நாங்கள் சிறையில் அடைக்க மாட்டோம்' என்று கோர்ட்டில் பம்மிய #SofaModel தவெக அரசு. அந்த பயம் இருக்கணும் CM சார்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

