சென்னை மேயராகிறாரா திவ்யா சத்யராஜ்?

 
ச்

இன்னும் ஓரிரு நாட்களில் எனது அரசியல் பயணம் குறித்த ஒரு நற்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன் என திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

Image


திமுகவில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், சென்னை மேயர் பிரியா, கோவை சமூக வலைதள பிரபலம் வைஷ்ணவி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு எம்.எல்.ஏ.சீட் கொடுக்கப்படவில்லை. திமுக சார்பில் போட்டியிட திவ்யா சத்யராஜ் விருப்பமனு அளித்திருந்தார். கோவை தெற்கு அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் திவ்யா சத்யராஜ் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், "வாரிசு அரசியல்" என்ற விமர்சனத்தைத் தவிர்க்கவும், ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


இந்நிலையில் திவ்யா சத்யராஜ் தனது எக்ஸ் தளத்தில், “இன்னும் ஓரிரு நாட்களில் என்னுடைய அரசியல் பயணம் குறித்து பகிர்வதற்கு நல்ல செய்தி ஒன்று உள்ளது. மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள், உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவுக்கு பதிலளித்துள்ள நெட்டிசன்கள், மேயர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாக பதிவிட்டுவருகின்றனர்.