“3 நாட்களுக்குள் விஜயுடன் ஒரு போட்டோ எடுத்து எனது இன்ஸ்டா பக்கத்தில் அனுப்புங்கள்”- விஜய் ரசிகர்களுக்கு திவ்யா சத்யராஜ் சவால்
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக சென்னை கிழக்கு மாவட்டம் மருத்துவ அணி சார்பில் மாவட்ட அமைப்பாளரும் மாநகராட்ணி சுகாதார நிலைக்குழுத்தலைவர் சாந்தகுமாரி தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு கோவி. செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 500 பள்ளி மற்றும் கல்லூரி மாணவி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் திவ்யா சத்யராஜ், “கரூர், சேலம், திண்டுக்கல் ஆகிய கூட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விஜயின் பேச்சை கேட்டேன். அதில் அவர் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என தேர்தல் வாக்குறுதிகளை பார்த்து சொல்லுகிறேன் எனக் கூறி இருந்தார். அவருக்கு மக்களுக்கு என்ன பண்ண வேண்டும் என புரிதலை இல்லை என்றால் மக்கள் எப்படி உங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். உங்கள் கட்சியில் பெண்களுக்கு எந்த பாதுகாக்கும் இல்லை. உங்க கட்சியைச் சார்ந்த அஜித்தாவை எப்படி நடத்தினீர்கள் என்பதிலேயே தெரிகிறது என கூறினார். தமிழக வெற்றி கழக தொண்டர்களுக்கு ஒரு சவால் மூன்று நாட்களுக்குள் விஜய் உடன் ஒரு புகைப்படம் எடுத்து என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அனுப்புங்கள் கவுண்டன் ஸ்டார்ட் என கூறினார். அதேபோல் தவெக தலைவர் விஜய்க்கு ஒரு சவால் துண்டு சீட்டு இல்லாமல் 10 தொண்டர்களின் பெயரை கூற வேண்டும் ஏனென்றால் நீங்கள் கட்சியின் தலைவராக இருப்பதால் தொண்டரின் பெயரை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல் அரசியலில் தைரியம் என்பது முக்கியமானது” என கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திவ்யா சத்தியராஜ், படிப்பு தான் மிகவும் முக்கியம் எதற்காகவும் படிப்பையும் கனவையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. வருகின்ற தேர்தலில் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலில் வெல்வதற்காக வரவில்லை மக்கள் பணி செய்வதற்காக கட்சிக்கு வந்துள்ளேன் அனைவரிடமும் இணைந்து மக்கள் பணி செய்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என கூறினார்

