"இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் நம் திராவிட மாடல் அரசு வீறுநடை போடுகிறது" - அமைச்சர் உதயநிதி

 
udhayanidhi

#INDIA கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

udhayanidhi

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாநில சுயாட்சி - மொழி உரிமை - சமூக நீதியின் குரலாய் தெற்கில் தோன்றிய தி.மு.கழகம், முதன் முறையாக பேரறிஞர் அண்ணா தலைமையில் 1967-ல் ஆட்சி அமைத்த நாள் இன்று.இந்திய ஒன்றியத்தில் ஒரு மாநிலக் கட்சி ஆட்சியைப் பிடித்தது என்ற  வரலாற்றை அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட அவர்களது தம்பிகளும் இதே நாளில் இருந்து தான் எழுத தொடங்கினார்கள்.

அந்த வரலாற்றின் நீட்சியாக, நம் கழகத் தலைவர் -  மாண்புமிகு முதலமைச்சர்  @mkstalin  அவர்கள் தலைமையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் நம் திராவிட மாடல் அரசு வீறுநடை போடுகிறது.

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காத்திடவும் - பாசிசத்தை வீழ்த்திடவும், #INDIA கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.