இடைத்தேர்தலில் தோல்வியுற்ற 2 மகளிருக்கும் மாவட்ட செயலாளர் பதவி- அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முடிவு
அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வர இருக்கின்ற இடைத்தேர்தலில் அதிமுக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் நியமனம் குறித்தும் ஆலோசனை செய்திருக்கிறார்கள்.
அதிமுகவில் மனக்கசப்பு ஏற்பட்டு விலகி இருப்பவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு விவாதமானது நடைபெற்றிருக்கிறது. வட மாவட்டத்தை சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கான வேலையை முன்னெடுத்து இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தலில் தோல்வியுற்ற இரண்டு மகளிர்களுக்கும் மாவட்ட செயலாளர் பதவி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

