ஆபாச குறுஞ்செய்தி புகார்- மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் கணவர் தலைமைச் செயலாளரிடம் மனு

 
s

கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவின் கணவர் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது தலைமை செயலாளர் சாய் குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார். 

கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு தொந்தரவு கொடுத்த எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது கணவர் தலைமைச் செயலாளருக்கு புகார் அளித்துள்ளார்.  மாவட்ட ஆட்சியர் இதை முதலமைச்சர் அலுவலகத்துக்கு கொண்டுசென்ற நிலையில், முதல்வர் அலுவலகம் சார்பிலும், மூத்த அமைச்சர்களும் MLA அருளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய  டிஐஜி அருளரசு, "MLA அருள் விக்னேஷ் முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எதிரான கருத்துக்கள் தெரிவித்து வந்தார். ஆனால் ஆபாசச் செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.  

கள்ளக்குறிச்சி ஆட்சியர் பத்மஜாவுக்கு தவெக எம்எல்ஏ சர்ச்சையான குறுஞ்செய்தியை அனுப்பிய விவகாரம் அரசியல் விவாதமாகி உள்ள நிலையில், இன்று கல்வராயன் மலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாமை தொடக்கி வைக்க வருவதாக இருந்த பத்மஜா அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. அதனால் ஆர்டிஓ ஜீவா முகாமைத் தொடங்கி வைத்தார்.