மாவட்ட ஆட்சியர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்- சற்று நேரத்தில் கைதாகிறார் அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பத்மஜா, கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்வாதி அழகப்பன் முன்பு ஆஜராகி தனது வாக்குமூலத்தை கொடுத்தார். அதனை நீதிபதி பதிவு செய்துகொண்டார். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான ஆபாச மெசேஜ் வழக்கு தொடர்பாக ஆட்சியர் 2.15 மணி நேரம் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. நீதிபதி அறையின் கதவு, ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.
164 பிரிவின்படி, பாதிக்கப்பட்டவர் நேரடியாக நீதிபதி முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்போது அந்த வழக்கின் உறதித்தன்மை அதிகரிக்கிறது. இதன்மூலம் நீதிபதியும் ஒரு சாட்சியாக மாறுகிறார். மேலும் எதிர்காலத்தில் வாக்குமூலத்தை திருத்தவோ, மாற்றவோ முடியாது. இந்த சூழலில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு வெளியே கூடுதல் காவல் துறையினர் தற்போது வருகை புரிந்துள்ளனர்.

