ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை

 
hogenakkal

ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

hogenakkalஒகேனக்கல் அருவி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காவிரி ஆற்றில் அமைந்துள்ளது. இது தருமபுரியில் இருந்து 46 கி.மீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 180 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.ஒகேனக்கல்லில் உள்ளது ஒற்றை அருவி அல்ல, பல அருவிகளின் தொகுப்பாகும். 'உகுநீர்க்கல்' என்ற தமிழ்ச் சொல்லே மருவி 'ஒகேனக்கல்' என்றானது.ஹொகேனேகல் என்ற கன்னட சொல்லுக்கு புகையும் கல்பாறை என்று பொருள் என்பர்.

Hogenakkal river

இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 11 ஆயிரம் கன அடியாக நீர் வரத்தால், பாதுகாப்பு கருதி ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.