நவ.13ம் தேதி மாணவர்களுக்கு கேக் வழங்குக - பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

 
s

நாடு முழுவதும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படும். எனினும், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் தமிழக அரசு பள்ளிகளில் 13-ம் தேதியே குழந்தைகள் தினம் கொண்டாடவும், கேக் வழங்கவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, குழந்தைகள் தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்ககம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குனர் லதா அதிரடி செயல்முறைகளை வெளியிட்டுள்ளார். வரும் 14.11.2026 அன்று குழந்தைகள் தினம்.  ஆனால் அன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால், முதல்வரின் ஆணைப்படி இந்த விழா 13.11.2026 வெள்ளிக்கிழமை அன்றே அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்படும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் கேக் (Cake) வழங்கி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முறையாக, திறமையாக, சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க பள்ளிக்கல்வி இயக்குனர், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் நிலையிலான 29 சீனியர் அதிகாரிகள் மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே Google Meet மூலம் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இயக்குனரால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் முதல்வர் விஜய் அரசு மாணவர்கள் மீது கொண்டுள்ள அக்கறையையும், அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியையும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.