சீட் கிடைக்காத அதிருப்தி- கட்சி தாவியவர்களுக்கு சீட் கொடுத்து அழகு பார்த்த தவெக

 
s

சீட் கிடைக்காத அதிருப்தியில் கட்சி தாவியவர்களுக்கு தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தொகுதி அ.ம.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதால், சீட் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அ.தி.மு.க திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளரான டாக்டர் என்.திருப்பதி, இரு நாள்களுக்கு முன்பு த.வெ.கவில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அவரை திருப்பத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார் த.வெ.க தலைவர் விஜய். இதேபோல் நாங்குநேரி தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவிலிருந்து விலகினார் நாராயணன். இந்நிலையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார்.

Image

காங்கிரஸில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன் இடைநீக்கம் செய்யப்பட்ட டி.செல்வத்துக்கு தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் சேப்பாக்கம் தொகுதியில் களம்காண்கிறார். அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளருமான தூசி மோகனுக்கு தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் போட்டியிட திமுகவின் ஆர் எஸ் முருகன் விருப்பமனு தாக்கல் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் நடத்திய நேர்காணலில் கூட கலந்து கொண்டிருந்தார் ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அவருக்கு அதே நெல்லை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறார் விஜய். இவர் அதிமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை பெரிய அளவில் பெற்றிருந்தவர். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து  வருமானவரித்துறை சோதனையாகியவற்றிற்கு ஆளாக்கி வந்தவர்.