தமிழகத்தில் உளவுத்துறை எங்கே உள்ளது? ராமதாஸ் கேள்வி

 
PMK

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் பணியை சரியாக செய்யாமல் இருக்கும் அதிகாரியை ஓராண்டுக்கு பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

PMK

 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் அரசியல் படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலை உருவாகியுள்ளது. சென்னையில் காவல் அதிகாரிகள் பணிமாறுதல் செய்யப்பட்டது மட்டும் போதுமானதல்ல. நடந்த கொலைகளுக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை உள்துறை மற்றும் காவல்துறையினருடன் சட்டம் - ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்தவேண்டும்.

pmk

சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதியில் உள்ள காவல் அதிகாரிதான் அதற்கு பொறுப்பு என அறிவிக்கவேண்டும். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் பணியை சரியாக செய்யாமல் இருக்கும் அதிகாரியை ஓராண்டுக்கு பணி நீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் உளவுத்துறை எங்கே உள்ளது? காலையில் உளவுத்துறையின் தலைவர் முதல்வருக்கு, முந்தைய நாள் நிகழ்வை விவரிப்பார். தற்போது இதை யாரிடம் சொல்வது என்று அதன் தலைவருக்குப் புரியவில்லை. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது” என்றார்.