கள்ளச்சாராய உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம் வழங்க கூடாது என்ற மனு தள்ளுபடி

 
கள்ளச்சாராய  உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம் வழங்க கூடாது என்ற வழக்கு தள்ளுபடி கள்ளச்சாராய  உயிரிழப்புக்கு ரூ.10 லட்சம் வழங்க கூடாது என்ற வழக்கு தள்ளுபடி

கள்ளச்சாரயம் அருந்தி உயிரை மாய்த்து கொள்பவர்களுக்கு இழப்பீடாக 10 லட்ச ரூபாயை அரசு வழங்க கூடாது என தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளச் சாராய உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு - விசாரணை ஆணையம்  அமைத்து முதல்வர் உத்தரவு | Organization of Inquiry Commission in  Kallakurichi spurious liquor ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் அருந்தி 65 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 10 லட்சம் இழப்பீடு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த குமரேஷ் என்பவர் தொடர்ந்துள்ளார், அதில் கள்ளச்சாரயம் அருந்துவது என்பது சட்ட விரோதமான செயல் என தெரிவித்துள்ளார். சாகித்ய அகடமி விருது பெறும் எழுத்தாளர்களுக்கு கூட 1 லட்சம் மட்டுமே ஊக்க தொகை அளிக்கப்படுகிறது, அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் கூட 2 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு மட்டும் 10 லட்சம் இழப்பீடு வழங்குவது சட்ட விரோத செயலை ஊக்கப்படுவது போல் ஆகி விடும் என குறிபிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10லட்சம் வழங்கியதால் சுமார் 6.5 கோடி அளவிற்கு மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், அவ்வளவு தொகை செலவு செய்ய உயிரிழந்தவர்கள் யாரும் தியாகிகளும் கிடையாது என மனுவில் தெரிவித்துள்ளார். எனவே கள்ளச்சாரயம் அருந்தி உயிரை மாய்த்துக் கொள்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக அரசு வழங்க கூடாது என உத்தவிடக் கோரியிருந்தார்.

கள்ளச்சாராய உயிரிழப்பு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும் ?  நீதிமன்றம் கேள்வி

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், செந்தில் குமார் அமர்வானது, இந்த வழக்கு விளம்பர நோக்கதுடன் தொடரப்பட்டிருப்பதாகவும்,இழப்பீடு வழங்குவது என்பது அரசின் முடிவு என்றும் அதில் நீதிமன்றம் தலையிடாது எனக்கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.