#BREAKING தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வெட்டப்பட்ட உடல் மீட்பு
Aug 5, 2026, 20:33 IST1785942191086
ஆக்ராவில் ரயிலில் கேட்பாரற்று கிடந்த பையில் உடல் பாகங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பெட்டியை திறந்தபோது மனித உடல் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ரயிலில் ட்ராலி சூட்கேசில் சிதைப்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெட்டிக்குள் மனித உடலை வைத்து சென்ற நபர் யார் என்பது குறித்தும், சென்னையில் இருந்து வந்ததா? என்பது குறித்தும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் யாருடையது என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

