திமுக, மதிமுக இடையே பிப்.4ஆம் தேதி பேச்சுவார்த்தை!!

 
vaiko mk stalin

 திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன் பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குழு அமைத்துள்ளது.

vaiko

ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -கழக அவைத் தலைவர்,  மு.செந்திலதிபன் -கழகப் பொருளாளர், ஆவடி இரா.அந்திரிதாஸ் -அரசியல் ஆய்வு மைய செயலாளர், வி.சேஷன் -தேர்தல் பணிச் செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

vaiko ttn

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பிப்.4ஆம் தேதி திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மதிமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது.  பிப். 3ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட், 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.