TNEB திடீர் அதிரடி! 90 நாட்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் துண்டிப்பு
Aug 1, 2026, 15:58 IST1785580117855
தமிழ்நாடு மின்சார வாரியம், தனது வருவாய் இழப்பை குறைக்க புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம், தனது வருவாய் இழப்பை குறைக்கவும், மின் சாதனங்களை பாதுகாக்கவும் 90 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை நீக்க திட்டமிட்டுள்ளது. மீட்டரை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை குறித்து நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் அலர்ட் அனுப்பப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் கூறியுள்ளது. கடைசி பில் போக, மீதமுள்ள டெபாசிட் தொகை வாடிக்கையாளருக்கு ட்திருப்பி தரப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

