தேவா மறைவிற்கு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அஞ்சலி..!

 
1

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில், ”35 வருடம் தேவா சாருடன் பயணித்துள்ளேன். அண்ணாமலை படத்தில் தொடங்கி பாட்ஷா என பல படங்களை இணைந்து பணியாற்றி இருக்கிறோம். அவரைப் போன்று நகைச்சுவையாக பேச முடியாது.

அண்ணாமலை படம் எடுக்கும்போது, முதலில் உங்களை சந்தித்தேன். அவரின் குடும்பத்தினரில் ஒருவனாக நான் இருந்திருக்கிறேன். இன்று அவர் மறைந்துவிட்டார் என்பது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. யாரிடமும் அவர் சண்டை போட மாட்டார், உண்மையான பிரண்ட்ஷிப் கொண்டவர். நான் எனது நண்பரை இழந்து விட்டேன்” என கூறியுள்ளார்.