பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்? - இயக்குனர் சுதா கொங்கரா பேட்டி
இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள ’பராசக்தி’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை விட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ள 60 காலகட்டங்களில் Set Property கொண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் The World Of பராசக்தி எனும் செட் அமைக்கப்பட்டுள்ளது . இந்த செட்டிற்கு திரைப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா பொது மக்களின் வரவேற்பு எந்த வகையில் இருக்கிறது என்பதை நேரில் பார்ப்பதற்காக வருகை தந்திருந்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் சுதா கொங்காரா, “பொதுமக்கள் பலரும் The World Of பராசக்தி எனும் இந்த செட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளனர். 60 காலகட்டங்களில் இருந்த இவைகள் பலரும் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி கேட்டு பார்த்திருப்பர். ஆனால் யாரும் இதை நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்த கால Gen Z குழந்தைகள் இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும், பராசக்தி திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பாக இதுகுறித்து ரசிகர்கள் ஒரு முன் அனுபவம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த செட் உருவாக்கப்பட்டது. இந்த செட் திரைப்படத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் கோரிக்கைக்கிணங்க இந்த செட் இன்னும் ஒரு வாரத்திற்கு மேலாக நீடிக்கப்பட உள்ளது. மதுரை, திருச்சி என மற்ற மாவட்டங்களுக்கும் இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்கு செல்ல உள்ளோம், திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் விரைவில் அறிவிப்பார். தற்போதுள்ள காலகட்டத்தில் பெண் இயக்குனர்கள், ஆண் இயக்குனர்கள் என்று இல்லை அதை மாறி அனைவரும் ஒன்றுதான் என்கின்ற நிலை வந்துவிட்டது. ஜெயம் ரவி மற்ற வில்லன்களை போல இந்த திரைப்படத்தில் அவர் கதாபாத்திரம் இல்லை. அவரைப் பொறுத்தவரையில் அவர் இந்த திரைப்படத்தின் ஹீரோ என்ற வகையிலே அவருடைய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.


