திரையுலகினர் அதிர்ச்சி! இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்!
Apr 15, 2025, 08:49 IST1744687198137
இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார். அவருக்கு வயது 58. இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற படங்களை ஸ்டான்லி இயக்கியுள்ளார். இதேபோல் எஸ்.எஸ்.ஸ்டான்லி தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களிலும் நடத்துள்ளார். சர்கார், ராவணன், ஆண்டவன் கட்டளை, ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். எஸ்.எஸ்.ஸ்டான்லி மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


