‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள் படமாக்கப்பட்டால் சட்ட நவடிக்கையை சந்திக்க நேரிடும்- சங்கர் எச்சரிக்கை

 
இயக்குநர் சங்கர்

Cஅனுமதியின்றி ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள் படமாக்கப்பட்டால் சட்ட நவடிக்கையை சந்திக்க நேரிடும் என இயக்குநர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இயக்குநர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சு.வெங்கடேசனின் ‘நவயுக நாயகன் வேள்பாரி்’ நாவலின் காப்புரிமையை கொண்டுள்ளவன் என்ற முறையில் அந்த நாவலில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு படங்களில் காட்சிகளாக வைக்கப்படுவது வருத்தமளிக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ஒன்றில் அந்த நாவலின் முக்கிய காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை தருகிறது. திரைப்படங்கள், வலைத் தொடர்கள் மற்றும் எந்த ஊடகத்திலும் நாவலின் காட்சிகளைப் பயன்படுத்துவதை தயவுசெய்து தவிர்க்க வேண்டும்.

 

இத்தகைய விஷயங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். படைப்பாளிகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அனுமதியின்றி நாவலின் காட்சிகளை படமாக்காதீர்கள் மீறினால் சட்ட நட்டிக்கையை சந்திக்க நேரிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.