இயக்குனர் ஷங்கரின் மகன் கதாநாயகனாக அறிமுகம்! பட பூஜையில் கலந்துகொண்ட விஜய் மகன்
இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் நடிக்கும் முதல் படத்தின் தொடக்கவிழா மிக எளியமுறையில் நேற்று நடந்தது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக அறிமுகமான படம் லவ் டுடே. இதேபோல் இந்த வருடம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தனது ஹீரோ அறிமுகத்தை வித் லவ் மூலம் தொடங்கினார். அதே வரிசையில், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் லவ்வர்ஸ் பாய். இப்படத்தில் அர்ஜித் ஷங்கருக்கு இணையராக கீர்த்திஷெட்டி நடிக்கிறார். இந்தப்படத்தை இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் என்பவர் இயக்கவிருக்கிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கவிருந்த சிங்கப்பாதை எனும் படத்தை இயக்க ஒப்பந்தமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப்படம் நடக்கவில்லை. இந்நிகழ்வில் யாரும் எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் நடிக்கும் முதல் படத்தின் தொடக்கவிழா மற்றும் பூஜை விழா சிறப்பாக நடைபெற்று, படத்தின் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இயக்குநர்களும், இயக்குநர் குடும்பத்தினரும் ஹீரோக்களாக களமிறங்கும் இந்த புதிய அலை கோலிவுட்டில் என்ன மாயம் செய்யப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதேசமயம் ஹீரோக்களாக களமிறங்கிய இயக்குநர்கள் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறார்கள்.

