இபிஎஸ் ஷாக்! அதிமுகவில் இருந்து விலகுவதாக ஆர்.வி. உதயகுமார் கடிதம்

 
edappadi palanisamy

அதிமுகவில் இருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

R. V. Udayakumar : Biography, Age, Movies, Family, Photos, Latest News -  Filmy Focus

இதுதொடர்பாக  திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அவர்களுக்கு, வணக்கம். நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கழக உறுப்பினராகவும், தற்போது மாநில கலைப்பிரிவு செயலாளராகவும் உள்ளேன். கட்சியின் தற்போது நிலை குறித்து ஆழ்ந்த வேதனையும் கவலையும் அடைந்துள்ளேன். தற்போதுள்ள மன நிலையில் கட்சியில் தொடர விருப்பம் இல்லாததால் எனது கலைப்பிரிவு செயலாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்தும் விலகிக்கொள்கிறேன். தற்போது வரை எனது பணியில் துணை நின்ற தங்களுக்கும், முன்னாள் அமைச்சர் பெருமக்களுக்கும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் நகர, பேரூராட்சி, வட்ட, பகுதி கழக நிர்வாகிகளுக்கும், எனது நன்றியினை கணத்த இதயத்துடன் தெரிவித்து விடைபெறுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.