களத்தில் இறங்கிய பா.ரஞ்சித், பாடகர் அறிவு! சென்னையில் விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்

 
களத்தில் இறங்கிய பா.ரஞ்சித், பாடகர் அறிவு! சென்னையில் விஸ்வரூபம் எடுக்கும் போராட்டம்

நீலம் மாணவர் இயக்கம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக இயக்குநர் பா.ரஞ்சித், பாடகர் அறிவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Image


டெல்லியில் நடக்கும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர்கள் வெற்றி மாறன், பா.ரஞ்சி, அமீர், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர் கலையரசன், பாடகர் அறிவு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். டெல்லியில் நடக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர்களின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம், நீட் வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.